நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் சனிக்கிழமை 2,540 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டதாகவும், நாள் ஒன்றுக்கு 60 ஆயிரம் டன் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கப்படுவதாகவும் நிர்வாகம் தெரிவித்தது.
இந்த நிறுவனத்தில் உள்ள தெர்மல் 1, 2, 1, 2 விரிவாக்கத்தின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மத்திய தொகுப்புக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து தமிழகம் உள்பட பிற மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது.
தற்போது, என்.எல்.சி. ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், அதிகாரிகள், பொறியாளர்கள் பணிக்குச் சென்று வருகின்றனர். ஒப்பந்தத் தொழிலாளர்களும் வேலைக்குச் சென்று வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், மொத்த உற்பத்தியான 2,990 மெகாவாட்டுக்கு, சனிக்கிழமை 2,540 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டதாகவும், நாள் ஒன்றுக்கு சுமார் 60 ஆயிரம் டன் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கப்படுவதாகவும், 8 லட்சம் டன் நிலக்கரி கையிருப்பு உள்ளதாகவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Link: http://www.dinamani.com/tamilnadu/2015/08/23/நெய்வேலியில்-2540-மெகாவாட்-மின/article2988942.ece